கோவிட் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக இரவு நேர கிளப்பில் நேரம் கழித்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின்..! 

0 3923

கோவிட் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக விடிய விடிய இரவு நேர கிளப்பில் நேரம் கழித்ததற்காக ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் அந்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

பின்லாந்தின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அதை பொருட்படுத்தாத 36 வயது பிரதமர் சன்னா மரின், ஹெல்சின்கியில் உள்ள Butchers என்ற இரவு நேர கிளப்பில் அதிகாலை 4 மணி வரை நடனமாடி பொழுதை கழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.   

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments